Thursday, March 26, 2009

யார் சொன்னது? வறுமையின் நிறம் சிவப்பு ?

நான் குடித்த ரேஷன் அரிசி
கஞ்சியின் நிறம் மஞ்சள் !

எனக்கு இருந்த அந்த ஒரே ஒட்டு போட்ட
சட்டையின் நிறம் பச்சை!

என் ஓலை குடிசையை அண்ணார்ந்து பார்த்தால்
அங்கே அங்கே நீலம் !

பசிக்காக திருடி மாட்டி கொண்ட பிறகு
சிறைஇல் கிடைத்த ஆடை நிறம் வெள்ளை!

பத்து ரூபாய் பணத்திற்காக நான் பிடித்த
அரசியல் கொடிகளின் நிறம் ஆயிரம் !

எதிர் கால கனவெல்லாம் கருப்பு !

இப்படி இருக்க,
யார் சொன்னது? வறுமையின் நிறம் சிவப்பு !

No comments: