‘சிந்து’ பெண்ணும் அந்த
‘கிருஷ்னா’வும் காதல் கொள்ள !
தோழிகள் ‘நர்மதை’யும்
‘கோதாவரி’யும் தூது செல்ல!
‘காவிரி’ போய் பெண் கேட்க
‘கங்கை’யும் முன்வந்து பெண் கொடுக்க!
வரதட்சணையாக ‘வைகை’யும்
வளைந்தோட!
‘அரபி கடல்’ அர்ச்சனை செய்ய!
கார் மேகங்கள் வேதங்கள் ஓத-வான்
இடிகளெல்லாம் தாளங்கள் ஆக!
‘வங்ககடலும்’ வாழ்த்துரைக்க
‘பாலாறு’ பந்தி பரிமாற-’தென்பெண்ணை’
உண்டு இளைப்பாற
‘பிரம்மபுதிரா’ மகிழ்ந்து பரிசளிக்க!
‘இந்தியபெருங்கடலில்’ இணைந்து
வாழ இன்றே வேண்டும்-இந்த
நதிகளின் சங்கமம்!
No comments:
Post a Comment