Thursday, March 26, 2009

குரங்கிலிருந்து மனிதன்..

குரங்கிலிருந்து மனிதன்
இது டார்வின் கூற்று!
மனிதனிடமிருந்து இப்போ மனித வெடிகுண்டு !
இது யாரின் கூற்று !

மனிதா நீ துடிப்பது சரிதான்
வெடிப்பது ஏனோ ?

தீவிரமாக வாதித்து பாரேன்
உன் மனதிடம் சில நிமிடம்
நீ தீவிரவாதியை மாறும் முன்பு !

நினைத்து பாரேன் ஒரு நிமிடம்
நித்தம் ஒரு யுத்தம் இங்கே !-வெடி
சத்தம் வானை தட்டும் !-மனித
ரத்தம் வீதி மொத்தம் -நாட்டின்
சுத்தம் அதை எங்கே வித்தோம் ?

அறுவடை காலம் தான்
நம் தேசத்தில் இப்போது .
என்ன இங்கே விதைப்பது விதைகளை அல்ல
சாதி மத பகைகளை !

தெளித்த உரத்தில் கூட இல்லை சுத்தம் !
அனைத்தும் மனித ரத்தம் !

களைகள் களைக்கப்படவில்லை!
மனித தலைகள் மட்டும் கழிக்கபடுகிறது !

ஆக நாம் அறுவடை செய்வது பயிர்களை அல்ல !
மனித உயிர்களை !

என்னதான் வேண்டும் உங்களுக்கு ?
“ராம ஜென்ம பூமி” என்கிறது ஒரு கூட்டம்
பழமை வாய்ந்த “பாபர் மசுதி” என்கிறது ஒரு கூட்டம்
நண்பா சிந்தித்துபாரேன்!
இப்படி நாம் வெட்டிக்கொண்டு செத்தபின்பு ……..

இரக்கம் கொண்ட ராமன் அந்த
ரத்த மண்ணில் கோவில் ஏற்பாரோ ?
புகழை கொண்ட பாபர் கூட அந்த
புழுதி மண்ணில் மசுதி ஏற்பாரோ ?

படித்துள்ளேன் ராமாயணத்தில் பல படலங்களை !
அதில் இணைக்கவேண்டாமே இந்த சடலம் தேடும் படலத்தை !

திரு குர்ரானில் கூட பகைவனை நேசி என்கிறது -நான்
உன்னை கொஞ்சம் யோசி என்கிறேன் !

தூண்டி பார்க்கும் அமெரிக்கா
சீண்டி பார்க்கும் பாகிஸ்தான் -உன்னை
வேண்டி கேட்கிறேன் வா நண்பா நம் பாரதத்தை
தாங்கி பிடிக்க !

No comments: