Thursday, March 26, 2009

மறு பிறவி உண்டென்றால்

மறு பிறவி உண்டென்றால்
மனிதனாய் பிறக்க மறுப்பேன்!
மதங்களின் நடுவே
மாட்டிக்கொண்டு மரிக்க மாட்டேன்!

மாறாக காற்றாய் பிறப்பேன்
கண்களுக்கு சிக்காமல்.

கோபுரங்களில் நுழைவேன்!
தேவாலயங்களில் தென்றலாய் வீசிடுவேன்!
மசூதியில் மணம் வீசுவேன்!

மறுபிறவி உண்டென்றால்

No comments: