ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான்
அப்பொழுதுதான் எழுந்தேன்!
அந்த ‘குரலை’ கேட்டு!
அது கண்டிப்பாக
என் பாட்டியுடையது தான்!
டேய் ,
“ஏற்கனவே இருக்கிற இந்த முதல்
சனியன்தொல்லை தாங்கல!
இந்த முறையும்
பொம்பள புள்ள பொறகிறதா இருந்தா
அத "பப்பாளி" பால் கொடுத்து கருவிலேயே
கலைச்சீடனும் ” டா!
அப்பாவுக்கு தான் இந்த
அதிரடி ஆணை!
அம்மா மயக்கத்தில்
இருக்கிறாள் போலும்!
அந்த வார்த்தையை
கேட்டவுடன் அதிர்த்து போனேன்!
இன்னமும் அழுது கொண்டிருக்கிறேன்!
கருவிலேயே இரக்கப்போகும்
என் நிலைமையை எண்ணி அல்ல!
என் பாட்டி போன்ற குறுகிய எண்ணம்
கொண்ட உலகில் “பெண்ணாக”
பிறந்து என் அக்கா படும்
வேதனைகளை எண்ணித்தான்!
இப்படிக்கு,
கருவிலேயே கருக இருக்கும்
“கண்மணி” பாப்பா!
No comments:
Post a Comment