Thursday, March 26, 2009

பெண்மை இன்றி மண்ணில் வேறு ஏதடா?

தவறி விழுந்தேன் துடித்து விட்டாள்!
அன்று அவளின் வயது 25!
தவறி விழுந்தேன் துடித்து விட்டாள்!
இன்று எனது வயது 25!
என்றும் எனக்காக துடிப்பவள் அம்மா!

நள்ளிரவு சமயங்களில்
நண்பர்களோடு கூத்தாடித்துவிட்டு வரும் போது
எனக்காக கண் விழித்து சோறு போட்டவள்!
அப்பா என்னை திட்டும் போது
எனக்காக அழுபவள்! என் சகோதரி!

நான் வெற்றி பெற்றபோது
என்னை கட்டி அனைத்து முத்தமிட்டவள்!
இன்று ஏதோ ஒரு போட்டியில் நான்
தோற்றதற்காக இன்னமும்
அழுது கொண்டிருப்பவள்! என் தோழி!

நான் அழும் போது அழுது
நான் சிரிக்கும் போது சிரித்து -என் கண்ணாடியாய்
பிரதிபளிபவள்! ஏழு கண்டங்கள் இருக்க நான்
மட்டுமே உலகம் என்றிருப்பவள்! என் மனைவி!

வேதாள கதை சொல்லி என்னை
தூங்கவைத்தவள்! மகாராசனாய் இரு
என்று என்னை வாழ்த்துகளால் நனைத்தவள் என் பாட்டி!

அம்மா!
சகோதரி!
தோழி!
மனைவி!
பாட்டி!

அட!
பெண்மை இன்றி மண்ணில்
வேறு ஏதடா?

பெண்மையே! வணங்குகிறேன் உன்னையே!

No comments: