Thursday, March 26, 2009

ஜனநாயகம்….

நம்ம பணத்துல போட்ட சிமெண்ட் ரோடு பாரு!-அது
ராத்திரி மழைக்கு தொலஞ்சி போட்சி ஜோரு!

பசியால அவன் கொழந்த அழுவுற வேல!-அவரு
ஊத்தராரு தலைவர் போஸ்டர் மேல 10 லிட்டர் பால!

சங்கம் வச்சி தமிழ் வலத்தது ஓல்ட் பேஷன்!-இப்ப
சங்கம் வச்சி ஜாதி வலப்பது நியூ பேஷன்!

போன தடவ ஊருக்கு போய் வந்து பார்த்தா வீட்டில நகையை காணாம்!-அட
இந்த தபா போய் வந்து பார்த்தா வீடே அங்க காணாம் பா!

மாரியம்மன் கோயில் கூழுக்கும் மசூதி கஞ்சிக்கும் அலயுது ஏழை கூட்டம்!
ஆனாலும் தாங்கல மதத்த வச்சி இவங்க போடுற ஆட்டம் !

ஆசிரியரே மாணவியை கற்பழிக்கும் அவலம் பாரும்!
பள்ளியிலே இந்த நிலை எப்போ மாறும்!

ரத்தம் கேட்கும் ராமன் இல்லை பகை விரும்பும் பாபர் இல்லை!
ஆனாலும் தாங்கல அயோதியிலே மனுஷன் தொல்லை!

கஷ்ட பட்டு காலேஜ் அனுப்பும் அப்பாவை பாரு!
இவரு மச்சிகளோடு சேர்ந்து புகை விடும் ஸ்டைலோ ஜோரு!

உள்ள இருக்கிற பிரட்சனையை மொதல தீர்ப்போம்!-நாடு
வல்லரசு ஆகுவதை பிறகு பார்ப்போம்!

No comments: