பத்து வருடங்கள் கழித்து
இப்பொழுதுதான் வருகிறேன்
என் சொந்த ஊருக்கு!
கண்டிப்பாக மாற்றங்கள் நிறைய
இருக்கும் என்று எண்ணிக்கொண்டே
நடந்தேன்!
அட எவ்வளவு மாற்றங்கள்
செழித்திருந்த வயல் வெளிகலெல்லாம்
“ப்ளாட்” கலாக மாறியிருந்தன!
குந்தியிருந்த குடிசைகளெல்லாம்
கல் வீடுகளாக எழுந்திருந்தன!
அரசமரத்தடி பிள்ளையார் கூட
சுவர்களை சுற்றிக்கொண்டு
அழகாய் அமர்ந்திருந்தார்!
சாணம் தெளித்து கோலம் போட்டு
அழகு பார்த்த மண் தரையும் கூட
சிமெண்ட் போட்டு பலபலத்தது.
தட் தட் தட்……….திடீரென
ஏதோ ஒரு சப்தம்.
திரும்பீபார்த்தேன்!
ஏழெட்டு பேர் அவசரமாய்
ஓடிக்கொண்டிருக்க
அவர்கள் கைகளில் அருவாலும்
சவுக்கு தடிகளும் முளைத்திருந்தன!
அவர்களின் கண்களில் சாதி வெறி
மின்னியிருந்தது.
அட பத்து வருடங்கள்
முன்பு நடந்த சாதி கலவரத்தில்
என் குடும்பம் முழுவதையும் இழந்து விட்டு
ஊர் இப்போது மாறியிருக்கும் என நினைத்து வந்தேன்.
நினைத்த படி ஊர் மாறியிருந்தது!-ஆனால்
மாறாதது மனிதனும் அவனின் மதமும் மட்டுமே!
No comments:
Post a Comment