Saturday, April 25, 2009

டிசம்பர் 26!

டிசம்பர் 26! கருப்பு கடல் தினம்........சுனாமி!!
அன்றைய ஞாயிறு மட்டும் -ஏனோ
விடிந்தவுடன் இருண்டு விட்டது !

கடல் அலைகளின் கரை கடந்த
மோதலால் தான்!

ஆயிரமாயிரம் குழந்தைகள் ஆடிப்பாடினர் உன் கரையில் !
உன் அலை வந்து அடித்ததால் -அவர்கள் இன்று,
ஆழ்ந்த நித்திரையில்!

ஆயிரமாயிரம் உறவுகள் பிணங்களாய்-அந்த நினைவுகள்
நெஞ்சில் ஆறாத ரணங்களாய்!

ஏய் கடலே, உன் மீது வலை வீசி மீன் பிடித்ததாலோ-எங்கள்
மீது அலை வீசி உயிர் குடித்தாய்!

இரைச்சலான கடலே, உன் இரைப்பை என்ன?
இவ்வளவு பெரியதாய் !

குடிசைகளை குப்பைகளாக்கி சென்றாய்!
கிராமங்களை "கிராம் "-களாக்கி சென்றாய்!

ஏய் கடலே, உன்னை "sea" என்றே அழைத்தோம்
அழகாய் ஆங்கிலத்தில் -இப்போ
"ச்சி" என்றே ஏசுகிறோம்!

நீ என்ன சுனாமியா?-அல்லது
எமனின் பினாமியா ?


திமிர் கொண்ட கடலே! இதோடு நிறுத்திவிடு-உன்
மோதலை .
மீண்டும் மீண்டும் வருவோம் உன் கரையினில்
கால்களை நனைக்க. தழுவிகொள் எங்களை காதலுடன்!
மோதலுடன் அல்ல !

உயிர் துறந்த நம் உறவுகளின் கல்லறையில்....வெள்ளை
பூக்களை தூவி வைப்போம் நம் கண்ணீர் பட்டு -அவை
சிகப்பாய் மாரட்டும்!!

No comments: