Saturday, April 25, 2009

பிப்ரவரி 14

ஊனமுற்ற மாதத்தின்
14 ம் நாளில்...................

அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
அவரவர் மனத்தினை அன்று!

அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
அவரவர் ஆடைகளை மட்டுமே இன்று!

பச்சையாக இருந்தால்
காதலிக்க காத்திருப்பவர்களாம்!

நீலமாக இருந்தால்
காதலித்து கொண்டிருப்பவர்களாம்!

கருப்பாக இருந்தால்
காதலை வெறுபவர்களாம்!

வெள்ளையாக இருந்தால்
அவங்க நல்லவர்களாம்!

கண்ணியமான காதல் இன்று
கலருக்குள் சிக்கிக்கொண்டது!
"டிராஃபிக்" சிக்னலா என்ன காதல் ?

காதலுக்கு அடையாளமாய்
அந்த ரோஜாக்கள்!
ஆம் சீக்கிரமாய்
வாடி விடுகிறதே!

பார்க்'கில் "டச்" காதல்
ஈ.சி.ஆரில் "இச்" காதல்!
ஃபார்ம் ஹவுஸில்
பணத்தில் காதல்!
டிஸ்கோத்தியில்
பாணத்தில் காதல்!

அங்கே அவர்களின்
வாழ்த்து அட்டைகளும்
வதங்கும் ரோஜாக்களும்
மட்டுமே இடம் மாறிக்கொண்டன!

உண்மையான அன்பும், காதலும்
ஏனோ தனித்தே நின்றன!
இதோ அவனை விட பணக்காரன் சிக்கிவிட்டான்!
இதோ அவளை விட அழகானவள் மாட்டிக்கொண்டாள்!

ஆகா! மாட்ரி கொண்டார்கள்!
ஜோடிகளை. காதலையும் தான்!

அதற்காக வருந்த
வில்லை அவர்கள்!
அதான் வருகிறதே
வருடத்திற்கு ஒருமுறை
அந்த பிப்ரவரி 14 !

ஏனோ
நான் தான் அழுகிறேன்!
இவர்களின் கொட்சையான
காதலை எண்ணி!

வெறுக்கிறேன் .
இந்த ஊனமுற்ற மாதத்தின்
14 ம் நாளையும் !
இது போன்ற காதலர்களை மட்டுமே!

சத்தியமாக
காதலை அல்ல!

No comments: