Saturday, April 25, 2009

மே 1

எனக்கு பிடித்த அந்த ஜீன்ஸ் பேண்ட்
அழகானது. அதில் அடிக்கப்பட்ட சாயத்தினால் அல்ல !
நெசவாளி நண்பனின் வியர்வையால் !

சென்னை 110 டிகிரி வெயில் ஒன்னும் செய்ய வில்லை
அட குளுரூட்ட பட்ட அழகான வீடு .காரணம் சிமென்ட் உடன் சேர்த்த
நீர் அல்ல ! சிமென்ட் உடன் சேர்ந்த கொத்தனாரின் வியர்வை !

என் பாயும் புலி பல்சர் பறப்பது பெட்ரோலால் மட்டுமல்ல!
என் மெக்கானிக் நண்பனின் வியர்வையாலும் தான் !

சிற்பங்கள் கூட சிறப்பது உளி பட்டு அல்ல!
சிற்பியின் வியர்வை துளி பட்டு !

நண்பன் ஒருவன் சொல்லிவிட்டு சென்றான் இப்படி
புது சொக்கா,புது வீடு ,புது பைக் ..........
கலக்குற கோபி ...............
நான் சொன்னேன்
கலக்குவது நான் இல்லை என் பாட்டாளி தோழர்கள் என்று!

உழைக்கும் வர்கமே !உங்களுக்கு
நிச்சையம் சொர்கமே !

No comments: