Saturday, April 25, 2009

ஏ..புள்ள... புள்ள ..இத எங்க போயி சொல்ல..?

அழகாய்தான்
இருந்தது.
நம் கல்லூரி
பேருந்து நிறுத்தம் !

ஒரு வேலை ...
நாம் இருவரும் இருந்ததாலோ ?...

பக்கத்தில் அமர்ந்து
பல நேரம் பேசியிருக்கிறோம் ..!
சில நேரம் சிரிப்பாய் ..
சில நேரம் சினமாய்...

ஏனோ
அப்போதெல்லாம்
நம்மை சுற்றி
நிறையப்பேர் இருந்தாலும்
"வெறிச்சோடி" இருப்பது போல்
ஒரு உணர்வு....

காலத்தை
கடவுள் தின்றிருந்தான் ....

இதோ !
இன்று .....அந்த
இன்பமான நினைவுகளை
இதயத்தில்
சுமந்தவனாய் ....
அதே பேருந்து நிறுத்தத்தில்
வந்து சற்று நேரம்
அமர்ந்துவிட்டு செல்கிறேன் ...

ஏனோ இப்பொழுது
என்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்
நெரிசலாய்...நெருப்பாய்
ஒரு உணர்வு.......

No comments: