அன்பே...அழகே..
என் காதலியே.....
என்னை தனியாக வந்து பார் என்றேன்..
என் பேச்சை கேட்க்காமல் இப்படி ஊரரியவா
வந்து பார்ப்பது.!
ரமணன் அங்கிள் சொன்னார்...
நீ வருவாய் என்று.!
நான் தான் அலச்சியமாய் இருந்தேன்.....
பின்னே, நீ என்னிக்கு உங்கப்பா பேச்சை கேட்டுருக்க?
இம்முறைதான் என்ன ஆச்சரியம் !
உன் அப்பா சொன்ன மாதிரியே வந்துட்ட...!
சரி, யாரையாவது அழவைக்காமல்
உன்னால் இருக்க முடியாதா?
இவ்வளவு நாள் நீ வராததால் நான் அழுதேன்....
இன்று நீ வந்துவிட்டதால் வான் அழுகிறது.....
கல் மனசு காரியே...அதான் கடந்து விட்டாயே..
கள்ள குறிச்சியில் ...பிறகேன் இன்னும்
அழ வைகிறாய் வானத்தை?
உன் வரவால் பள்ளி பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்!
ஏனோ பாட்டாளி நண்பர்களுக்கு திண்டாட்டம்!
என் உயிரில் புகுந்து -இந்த
பயலை நேசமாக்க சொன்னேன் .-நீயோ
பயிரில் புகுந்து வயலை நாசமாகி சென்றாய்!
"விவசாயி தோழர்களே என்னை மன்னியுங்கள்..!"
உனக்காக நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன்!
என்ன செய்வது? உன்னை
காதலித்து தொலைத்துவிட்டேனே!..
நீ வரவில்லை என்றால் துன்பம் !
வந்து விட்டால் அதனினும் துன்பம் !
என்ன செய்வது? இது
காதலில் விழும் ஆண்களின் விதி !
நான் மட்டும் விதி விலக்கா என்ன?...
நீ கடந்து சென்றுவிட்டாய் சுலபமாய்
கரையை ;என்னையும் தான்...
உன்னால் நிரம்பிய வெள்ளத்தால்
என்னால் தான் கடக்கமுடியவில்லை சாலையை....
அடியே..என் அன்பே..நிஷா !
இனிமேலும் இப்படி ஊரறிய வராமல்-தனியே
என்னிடம் மட்டும் வந்து
ஒரு முத்தமிட்டு செல் !
சத்தமில்லாமல் !.......
No comments:
Post a Comment