Monday, December 03, 2012

மாற்றுத் திறனாளிகள் தினம் - (03-12-2012)


கண்பார்வை இல்லை.
கலங்கவில்லை அவர்கள் !
கற்கண்டு குரலால் ;கை மீட்டும் இசையால்
கண்கள் ஆயிரம் அவர்மேலே !

வாய் பேசமுடியவில்லை .
வாடிபோகவில்லை அவர்கள்!
விரல் அசைவு ஒவ்வொன்றும்

விதவிதமாய் கதைசொல்லும்!

கால்கள் இரண்டும் முடக்கம்.
கவலைகள் ஏதுமில்லை !
கால்களின் ஓட்டம்தான் நின்றன தவிர
கற்பனை ஓட்டங்கள் அல்ல!
கைகள் இரண்டும் காலாய் மாறி
கலக்கலாய் நடனமாடும்.
சுற்றிநிற்கும் மனிதரெல்லாம்
கையைத்தட்டி ரசிப்பதால்
வாழ்வது இவர்களல்ல !
இவர்கள் மூலம் கலையே!

சுத்தி பேசி வீணா போகும்
மனிதருக்கு நடுவில்
கத்தி பேசி பேனா விற்கும்
ரயில் தோழன் !

வேட்டு வைத்து பிழைத்து
வாழும், மனிதருக்கு நடுவில்
பாட்டு படித்து உழைத்து வாழும்
பண்பு தோழன் !

கண்ணடித்து காதல் தேடும்
நண்பர்கள் நடுவில்
கால்களிலே தேர்வெழுதும்
சாதனை தோழன்!

ஒல்லியாய் உடலும்
உறுப்பும் ஓய்ந்த பின்னும்
கில்லியாய் பறக்கும்
ஒலிம்பிக் வீரன் !

போற்றும் திறன்கள் மிகுந்து
இருக்க ; மாற்றுதிறன்கள்
என்று கூற மனமும் கூட
மறுக்கிறது !

உங்களுக்கான நாள் இன்று .
உழைப்பு, ஊக்கம் தன்னம்பிக்கை
என கற்றுக்கொள்ள உங்களில்
பாடங்கள் நிறைந்திருக்க
வாழ்த்து சொல்ல
வாய் சொல் வரவில்லை.
மாறாக ,இருப்பேன் என்றும்
உங்களை மதிக்கும் மாணவனாய் !

No comments: