நேற்றிறவு ஒரு சின்ன சண்டை
கோபத்தில் சாப்பிடாமலே கண் அயர்ந்தேன்
அப்படியே உறங்கியும் போனேன்!
திடீரென எழுந்தேன்
சுற்றி பார்த்தேன் அவளை காணவில்லை
பதறி போய் எழுந்து அறையறையாய்
தேடினேன்.காணவில்லை.
சோர்ந்துபோய் நின்றேன்!
அப்படியே
அவள் நினைவுகளில் கரைந்தேன்!
ஒரு மழைக்கால மாலை!
நானும் அவளும் கைகோர்த்து
கடற்கரையோரம் நடந்தபோது
நான் சொன்ன மொக்கை ஜோக்குக்கு
அவள் வாய்விட்டு சிரிக்கிறாள்!-அப்போ
ஏய் பொறுமையாய் சிரி
விண்வெளியில் இருந்து ஏதோ ஒரு
நட்சத்திரம் தான் பூமி வந்து ஜொலிக்கிறது என்று
“நாசா”வந்து உன்னை பிடித்துக்கொள்ள போகிறது
என்றேன் கிண்டலாய்!
ச்சி போடா….என்று செல்லமாய்
ஒரு மெல்லிய வெட்கம் சிந்தினாயே!
மீண்டும் வேண்டும் அந்த மழைக்கால மாலை!
இன்னொருமுறை…….
நான் கவிதை எழுதிக்கொண்டிருந்த சமயம்
என்னை பத்தி ஒரு கவிதை சொல்லுங்களேன்
என்றுகூறி தலை வருடினாய்!
நானும் ஆரம்பித்தேன்………..
அன்பே நீ ஒரு “பூ”தான்
சந்தேகம் இல்லை .
ஆனால் என்ன பூ என்பதில் தான் எனக்கு
செம்ம குழப்பம்!
உன் இதழ்கள் சிகப்பு என்பதால்
செம்பருத்தி பூவா?
உன் மனசு வெள்ளை என்பதால்
மல்லிகை பூவா?
என்னை செல்லமாய் “வாடா”போடா என்று
கூறுவதால் வாடாமல்லியோ?
எனக்கு அன்பினை அள்ளி அள்ளி தருவதால்
அல்லிப்பூவா?
கவிதையை முடிக்கமுடியாமல் தினறின போது
நான் உங்க இணைப்’பு’ என்று முற்றுப்புள்ளி வைத்து
சிரிதாயே!
அந்த நினைவலைகள் நீங்கவில்லை
இன்னும் நெஞ்சில்!
இன்னொரு நாள்………………….
இன்று சீக்கிரம் வந்துவிடுகிறேன்
நாம் வெளியில் செல்வோம் என்று கூறி சென்று
அலுவல் சுமையால் தாமதமாய் வந்த சமயம்
என் சட்டையை சுழற்றி சுவரோரம்
கோவமாய் வீசினாய் !
ஏய்!என் மீதுள்ள கோபத்தை ஏன்
சட்டை மீது காட்டுகிறாய் என்றேன்!அதற்கு நீ சொன்னாய்
கோபம் உங்க மீது அல்ல.
இந்த சட்டை மீதுதான்.
பின்னே நான் சாய வேண்டியத்தோலில்
அது சாய்ந்திருந்தால் கோபம் வராதா?
என்று செல்லமாய் சிணுங்கினாயே!
நினைவுகள் மீண்டும் வாட்டின!
ஏதோ ஒரு நாள் தலைவலியால்
சோர்ந்து படுத்தேன்.
பதறிப்போய் பக்கத்தில் அமர்ந்து
அமிர்தாஞ்சன் தேய்தாய்!அன்பாய்
அட தலைவலி பறந்து போனது.
ஏய்!உன் கை பட்டதும் தலைவலி
காணாமல் போனது என்றேன்!
சிரித்துக்கொண்டே நீ சொன்னாய்
பாம் ஒன்று செயல் மூன்று
புதிய அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங்!
அப்போது சிரித்தேன்
இப்போது அழுகிறேன்
நீ எங்கே சென்றாய் என்று தெரியாமல்!
இன்னுமொரு நாள்………..
நான் திருட்டு தம் அடிப்பதை
பார்த்தபோது நான் அதனை
அப்படியே பின்னால் மறைத்தேன்.
அது என்ன என்று கேட்டாய்!
நான் மழுப்பலாய் ‘சீக்ரட்’ என்றேன்
தலையில் ஒரு செல்லமாய் கூட்டு
வைத்து ‘சீக்ரட்’ அல்ல ‘சிகரெட்’!
இது என்ன கெட்ட பழக்கம் என்று
கோபமாய் சிணுங்கினாய்!
அன்றோடு நிறுத்தினேன் சிகரெட்டை!
ஏதோ ஒரு விடுமுறை நாளில்…………..
அலுவல் குறிப்புக்காக
உள்ளே இருந்து உலகவரைப்படத்தை
கொண்டுவா என்றேன் உன்னிடம்.
நீயோ என் புகை படத்தை கொண்டுவந்து தந்தாய்.
என்ன இது என்றேன் கோபமாய்.
நீ பொறுமையாய் சொன்னாய்!
என் படத்தை காட்டி இதுதான் என் உலகம் என்று!
அங்கே என் கண்ணீர் துளி இரண்டு
எட்டிப்பார்த்தது!
நினைவுகள் நெஞ்சை தாறுமாறாக தாக்கியது!
அமுதமாய் நீ கொடுத்த தேநீர்!
எனக்காக நீ சிந்திய கண்ணீர்!
என் கோபத்தை தணிக்க நீ தந்த முத்தம்!
உன் அழகான சிரிப்பின் சத்தம்!
நான் கைத்துடைக்கும் உன் முந்தானி!
நான் தூங்கும் போது நீ வைத்த மருதாணி!
என் மார்பில் தூங்கும் உன் வளையல்!
பக்குவமாய் நீ ஊட்டின துவையல்!
எல்லாம் என் நினைவை தாக்கின!
நீ தான் என் உயிர்
என்பதை நன்று அறிவாய்!
பின் ஏன் இந்த பொய்க்கோபம்!
எங்கே சென்றாய் அன்பே!
கலங்கினேன் இன்னும் அவளை காணாமல்!
கதறி அழுதேன் சத்தமாய்!
அன்பே ஐ லவ் யூ
நீ எங்கடா இருக்க?
நீ எங்கடா இருக்க?
நீ எங்கடா இருக்க?
சட்டென்று கரம் ஒன்று
கையை பிடித்து பதறியது………
என்ன ஆச்சி?என்ன ஆச்சி?
டக்கென எழுந்து விழித்தேன்!
அப்போதுதான் உன்ர்ந்தேன் எல்லாம் கனவு என்று!
ஒண்ணுமில்லைமா
கனவுல நீ! என்றேன்
ஐயோ! கனவிலும் நான்தானா?
நிம்மதியாய் தூங்குங்கள்.என்று கூறி
முத்தமிட்டு தலை கோதினாள்!
அப்படியே உறங்கிப்போனேன்!
கனவு காண! இல்லை இல்லை
அவளை காண!
No comments:
Post a Comment