Wednesday, March 18, 2009

அவ்வையார் ஒரு குழப்பவாதி..

ஆத்திச்சூடி எழுதின அவ்வையார் ஒரு குழப்பவாதி !

சான்றுகள் :
அவ்வையார் முருகருக்கு சுட்ட (அதியமானிடம் இருந்து சுட்ட ) பழம் வேண்டுமா சுடாத படாத பழம் வேண்டுமா என்று முருகரை வரிசை கட்டி சாரி வரிசை படுத்தி பாடியதால் அவரை நாம் ஒரு இந்து புலவரே என்றிருந்தோம் .
ஆனால் எனது நீண்ட ஆராய்ச்சின் மூலம் அவர்கள் ஒரு குழப்பவாதி என்று கண்டுபிடித்து உள்ளேன்....
அவ்வையார் தன் ஆத்திசூடியில் சொல்லியிருப்பதை கவனியுங்கள் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் . இதில் இருந்து என்ன புரிகிறது அவ்வை தினமும் மறக்காமல் ஓத சொல்கிறார் .எனவே அவர் இஸ்லாமிய கருத்தினை பரப்பியுள்ளார்.
மேலும் அடுத்த வரியில் மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் .இந்த வரியில் நாம் வேளாங்கண்ணி மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் என்கிறார். இங்கே கிறித்துவ மதத்தை பரப்புகிறார்.....

இப்படி எல்லா மதங்களையும் பாடியுள்ள இவர் ஒரு குழப்பவாதி தானே..

No comments: