இன்றைக்கு உலகளவில் கால்பந்து ,டென்னிஸை தொடர்ந்து கிரிகெட்டுகும் ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர் ......
அப்படி என்னதான் இந்த கிரிகெட்டில் உள்ளது என்று நான் ஆராயும் போதுதான் அந்த ஆட்டத்தில் எத்துனை ஏமாற்று வேலைகள் உள்ளன என்று அறிந்து கொண்டேன்....
1) பவுலர் பந்து வச்சிருந்தாலும் "நோ பால்"னு நடுவர் சொல்றாரு ....
2)ஓவர்னு சொல்லிட்டு பிறகும் அடுத்து பந்துவீசறாங்க....
3)மொத்தம் பதினோரு பேரு விளையாடுற இந்த ஆட்டத்துல
"ஆல் அவுட்" னு சொல்றாங்க ஆனால் பத்து பேருதான் அவுட்டு ஆகியிருப்பாங்க.....
4)ஓடாம அவுட் ஆகுறாங்க ஆனா" ரன் அவுட்"னு சொல்றாங்க....
5)ஒரு ஓவருக்கு ஆறு பால்னு சொல்றாங்க ..ஆனா ஆட்டம் முழ்தும் ஒரே பந்தே போடுறாங்க...
6)"மேட்" போட்டிருபாங்கலாம் ..ஆனால் அது மேல நடக்ககூடாதாம்...
7)'ஸ்லீப்' னு சொல்லுவாங்க ஆனால் அங்க இருக்கிறவர் தான் ரொம்ப உஷாரா இருக்கனுமா.....
8)மழை பெய்ந்து முடிஞ்சிருக்கும் ஆனாலும் மழையால் ஆடம் ரத்துன்னு சொல்லுவாங்க.....
9)நடுவர் ரெண்டு கையை தூக்கினால் ஆறு ரன்னாம் ...ஒரு கையை தூக்கினால் மூணு ரன்னு தானே தரனும் ஆனா அவுட்டாம்...
இப்போ புரியுதா கிரிக்கெட்டு ஒரு பிராடு கேமுன்னு.....
No comments:
Post a Comment