Wednesday, March 18, 2009

கிருஷ்ணாயில் ,பாமாயில் பெயர் காரணம்..

நாம சின்ன வயசுல பாட்டி வடை சுட்ட கதை கேட்டிருப்போம்..அந்த வடை சுட்ட பாட்டிக்கும் ஔவை பாட்டிக்கும் தொடர்பு இருக்குமா என்று ஆராயிச்சி செய்ததில் அவர்கள் இருவரும் அக்கா ,தங்கை என்பதை கண்டறிந்தேன்...

அவ்வைதான் முருக பெருமானிடம் சொல்லி அந்த பாட்டிக்கு வடை சுட ஆயிலுக்கு ஏற்பாடு பண்ணினார்......

முருகனுக்கு வள்ளியுடனும் தேவானையுடனும் அடுத்தடுத்து அப்பாயின்மென்ட் இருந்ததால் தன் மாமா "கிருஷ்ணா"விடம் அந்த பாட்டிக்கு ஆயில் கொடுத்து உதவ சொன்னார்.....தன் மச்சான் சொன்னதால் கிருஷ்ணாவும் அந்த பாட்டிக்கு ஆயில் கொடுக்க முடிவு பண்ணினார்.....அந்த சமயம் அங்கே வந்த அவரின் காதலி "பாமா"வையயும் உடன் அழைத்து அந்த பாட்டியிடம் சென்று அடுப்பை பற்ற வைக்க ,வடையை சுட ஆயில் கொடுத்தார்....அதன் படியே அடுப்பை பற்ற வைக்கும் எண்ணைக்கு "கிருஷ்னாயில்" என்றும் ,வடை சுடும் எண்ணைக்கு "பாமாயில்" என்றும் பெயர் வந்தது ....

No comments: