என் இருமலுக்கு கசாயம்
தந்த போது எம்.பி.பி.எஸ்!
நான் தவறு செய்து
அப்பாவிடம் அடிவாங்கும் போது
என் தவறை மறைத்து எனக்காக
வாதாடும் போது பி.ஏ.பி.எல்!
எனக்கு தலை வாரி பள்ளிக்கு
அனுப்பும் போது டிப்ளமோ இன் பேஷன் டெக்.!
எனக்கு பள்ளி பாடங்களை பரிவுடன்
சொல்லி தரும் போது எம்.ஏ.பி.எட்!
கடுகு டப்பா வில் காசு திருடியதால்
என்னை செம்மத்தியாக கவனித்த போது ஐ.பி.எஸ்!
ஒவ்வொரு விஷயத்திலும் என்னை
பொறுப்பாக கவனித்த போது ஐ.ஏ.எஸ்!
அட என் அம்மாவுக்கு தான்
எத்தனை பட்டங்கள்!
No comments:
Post a Comment