Tuesday, March 30, 2010

போடி...போய் விடுடி...!

எங்கிருந்தோ அவள் வந்தாள்..
எனக்கேன் உள்ளம் தந்தாள்..
இசை பாடி இருந்த மனசு
திசை மாறி அலையுதடி..

கயல் கண்ணாள்
புயல் தந்தாள் மனதில்..
முயல் போல இருந்த மனசு
துயில் ஆற மறுக்குதடி..
அகம் முழுதும் அனல் வீசினாள்
முகம் முழுதும் புனல் ஆனது...

கணம் கூட பிரியாமல்
தினம் சேர்ந்து மகிந்திருந்தோம்..
சினம் ஏனோ என் மீது
ரணம் ஆனது என் நெஞ்சம்..

கனவுகள் கரைந்து போனாலும்
நினைவுகள் நித்தம் கொல்லுதடி..
நானா வந்து கேட்டேன்..காதலை
நீ னா தானே தந்தாய்..இப்போ
கானா போனது உன் லவ்வு..
வீணா போனது என் லைப் ..
இன்று..
மனம் முடித்து சிரிக்கிறாய் நீ...
தினம் குடித்து சிதைகிறேன் நான்..
கணவனும் குழந்தையுமாய் நீ..
கண்ணீரும் கவிதையுமாய் நான்....

1 comment:

ஜானு... said...

nice one ... ennama feel pannirukinga ...