Saturday, April 03, 2010

மொபைல் போன்..

கடலுனா மீனு..
காதளுனா ப்போனு..
அனைவருக்கும் ஏர் டெள்ளு
அவளுக்கு மட்டும் ஏர் செல்லு ..
டியுவல் 'சிம்'ம போட்டுக்கிட்டு ..
ட்ரீம்லையே மிதந்துகிட்டு ..
பில்லு வந்த பின்னாலும்
பிலிம் காட்ரதை விடலையே..

பத்தே பத்து நம்பரு
பல பேரு நண்பரு
கண்ணுக்கு மறஞ்சிருந்தாலும்
கான்பிரன்ஸ் 'கால்'ல இனஞ்சிருப்போம்..

வேலடைன்ஸ் 'டே'க்கு கால் பண்ணி
பேலன்ஸ் எல்லாம் போன பின்பு..
டாப்பப் பண்ண வழி இல்லாம
விழி பிதுங்கி நின்ன போது..
தானே வந்து ரீசார்ஜ் பண்ண
அண்ணன் நியாபகம் வரும் போது
அமோன்ட்டோடு ஏறுதே
அண்ணனோட அட்டாச்மென்ட் ...

"டார்லிங் டார்லிங் டார்லிங்
ஐ லவ் யு ..லவ் யு..லவ் யு.."


அவளுக்கு பிடிச்ச பாட்டு
ஹலோ 'டியு'னா மாத்தியாச்சி..
அப்பா கால் பண்ணி இத கேட்டு
கன்றாவினு சொல்லும்போது
ஸ்ரிதேவிக்காக வச்சேன்பா'னு சொன்னதுக்கு
போடா மூதேவின்னு அப்பா சொல்ல
அக்கா ,தங்கை, அம்மா சிரிக்க
நானும் சிரித்தேன் அவர்களோடு...

ஒன் டூ ஒன்
கம்மியுனிகேட்
பண்ண தான் இந்த அலை பேசி!- என்றாலும்
121 க்கு கால் பண்ணி கலாய்க்கும்
போது அது ஒரு தனி "கலை" பேசி..

அன்பும் அழகும்
தரும் போது
அது தரும் அவஸ்தைகளை
அகம் மறந்து விடுகிறது .....
அருகில் அதுவும் இல்லையென்றால்
அனைத்தும் இல்லை என்றாயிற்று ..!

1 comment:

ஜானு... said...

பேசி ... பேசி .... தொலைபேசி ... இப்போ தொல்லைபேசி ஆகிடுச்சி ...