Wednesday, August 15, 2012

மவுன ராகம்

                      நான் அவளைக் காதலிக்கிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள். .இது எனக்கு தெரியும். ஆனால் அதை அவள் என்னிடம் சொல்லாமல் மவுனம் காக்கிறாள். அவளின் மவுனத்தை கலைத்து, எப்படியாவது அவளாகவே தன் காதலை முதலில் சொல்ல வைக்கவேண்டும் என்று நானும் காத்திருந்தேன்.

          அன்று ஞாயிறு. அவள் எனக்கு போன் செய்தாள்,சிவா "போரடிக்குதுடா ஏதாவது 'டிவிடி' வாங்கிட்டுவாடா". அவள் இப்படி சொன்னதும் எனக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது . இன்று எப்படியாவது அவளின் மவுனத்தை கலைத்து காதலை  வாங்க வேண்டும் என்று .அதற்கு ஏற்றவாறு நல்ல காதல் படத்தை வாங்கிகொண்டு அவள் வீடு நோக்கி நடந்தேன். படம் "மவுன ராகம்" .

                    இருவரும் அருகருகே உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தோம் . எனக்கு படத்திலே கவனமே செல்லவில்லை, அவளையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவள் படத்தை  ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள். படத்தின் இறுதியில் ரேவதி மோகன் மீது வந்து விட்ட தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்து இவள் உண்மையிலேயே கண் கலங்கிவிட்டாள். இதுதான் சமயம் என்று நான் சைடில் பிட்டைப்போட ஆரம்பித்தேன்," ச்சே,  இந்த ரேவதி ஏன் இப்படி மவுனமா இருக்காள்? மோகன் மீது உள்ள காதலை வாயைத் தொறந்து சொல்லிவிட வேண்டியதுதானே ? இந்த பொண்ணுங்களே இப்படிதான் " .நான் சொல்லியதை கேட்டும் அவள் மவுனமாகவே படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
                          கிளைமாக்ஸ்சில் , மோகனும் ரேவதியும் சேர்ந்ததைப்பார்த்து இவள் முகம் லேசா மலர்ந்தது .படம் கண்டிப்பாக அவளை பாதித்திருந்தது. கண்டிப்பாக அவள் மவுனத்தை கலைத்து காதலை சொல்லிவிடுவாள் என்று என் மனம் சொல்லியது. .ஒருவழியாக படம் முடிந்தது .அவள் மவுனமும் கலைந்தது. அவள் சிவா என்று என்னை அழைத்தாள்.நான் மனதுக்குள் ஆனந்தமானேன். அவள் தொடர்ந்து பேசினாள். சிவா ," படம் சூப்பர் டா .சாந்திரம் வேற படம் வாங்கிட்டு வரியா? " நான் நொந்துப்போனேன். ச்சே, கவுத்துப் புட்டாளே என்று எண்ணிக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன் . மீண்டும் அவள் என்னை அழைத்தாள்.நான் உற்சாகமாய் திரும்பினேன்.அவள் அமைதியாய்  சொன்னாள் சிவா ," சாந்திரம் இங்கிலீஷ் படம் ஏதாவது வாங்கிட்டு வாடா " ச்சே மறுபடியும் கவுத்துப் புட்டாளே . நான் மீண்டும் நடக்க தொடங்கினேன் "சைலன்ஸ் சாங் "  என்று ஏதாவது இங்கிலீஷ் படம் இருக்குமா ? என்று நினைத்துக்கொண்டு.

No comments: